வரலாறு

திருக்குடும்ப கோயில் வரலாறு

church

கி.பி. 1850 – 1852 பிரான்சு நாட்டு அரசகுடும்பத்தைச் சேர்ந்தவரும், செல்வந்தருமான திரு. ஹென்டிரிக் என்பவர் தமது துணைவியுடன் உலக சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். சுற்றுப் பயணத்தின் போது மதுரைமாநகரம் வந்து சேர்ந்தனர். வடக்கன்குளத்தில் மாதா காட்சி கொடுத்துள்ள விபரங்களை மதுரை மி~னரியின் அறிக்கைகளின் வாயிலாக அறிந்தனர்.

எனவே காட்சி கொடுத்துள்ள மாதாவை நேரில் தரிசனம் செய்து வரவேண்டும் என்று விரும்பினர். வடக்கன்குளம் வந்து சேர்ந்தனர். மாதாவை தரிசனம் செய்து கண்ணீர் வடித்தனர். அவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகளாகியும் குழந்தைகளில்லை. பொருட்செல்வம் முதல் அனைத்துச் செல்வங்களிலுந்தம் குழந்தைச் செல்வம் இல்லாமலிருப்பது அவர்களுக்கு பெருங் குறையாகவே இருந்தது.

தூய கன்னிமரியாள் காட்சி கொடுத்த தாய் எப்படியும்நம் மன்றாட்டை கேட்டு அருள்புரிவாள். தோன்றி மறைந்தவளல்ல நிரந்தரமாகவே உயிரோவியத்துடனிருந்த காட்சி அளிக்கும் தாய் நம்மைக் கைவிட மாட்டாள் என்று பூரண நம்பிக்கை கொண்டவர். “நமது மன்றாட்டு கேட்கப்பட்டது” என்று மனப்பூர்வமாகவே விசுவாசித்தனர். தங்களது சுற்றுப்பயணத்தை தொடர்ந்தனர்.

ஹன்டிரிக் குடும்பத்தினர் ஓராண்டுக்குள் ஓர் அழகிய ஆண்குழந்தையைப் பெற்று அகமகிழ்ந்தனர். 27 ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் பட்ட கவலை அற்புதமாகவே நீக்கப்பட்டது. உள்ளம் பூரிப்படைந்தனர். அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. அவர்களது வாழ்வையே மலரச் செய்துள்ள பரலோக இராக்கினிக்கு என்ன செய்வதென்று அறியாது திணறினர். திகைத்து சிந்தனையிலாழ்ந்தனர். மதுரை சேசு சபை வேத போதகர்களுடன் தொடர்பு கொண்டனர். சேசு சபை வேத போதகர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு மாதாவுக்கு நவீனமானதொரு ஆலயம் கட்டுவதென முடிவு செய்துள்ளனர்.

எனவே கி.பி. 1855ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தியதி பங்குத் தந்தை சங். ஜோஸப் வெடியா கிரகோரி சுவாமிகளும் சேசுசபை குருக்கள் மற்றும் பெர்கண்டல் என்ற சந்நியாசியும் ஊர் பொதுமக்களும் புடை சூழ்ந்து நிற்க, திருச்சி மறை மாவட்ட ஆண்டகை வணக்கத்துக்குரிய கோனோஸ் அலக்சியூஸ் ளு.து. ஆயர் அவர்கள் முதல்கல்லை ஆசீர்வதித்து மூலைக்கல்லாக நாட்டினார்கள். சேசுசபை மதப்போதகர்களின் மேற்பார்;வையில் பங்குத் தந்தைகளும், ஊர் பொது மக்களும் பூரண ஒத்துழைப்பு கொடுத்தனர். இம்மாபெரும் ஆலயம் நவீன வேலைப்பாடுகளுடன் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோயில் கட்டிமுடிப்பதற்கு 17 ஆண்டுகளாயின. 1872ஆம் ஆண்டு சங். பௌகட் அடிகளார் காலத்தில் கலைப் பொலிவுடன் தலைநிமிர்ந்து நிற்கும் இவ்வாலயம் அபிஷேகம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *