மாதாவின் புதுமைக் காட்சி

மாதாவின் புதுமைக் காட்சி

மாதாவின் புதுமைக் காட்சி

matha-2

மரத்தால் செதுக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மிதந்து வந்த இந்த அற்புதமான சுரூபம்…! இதோ ஆலயத்திலே கொலு கொண்டு இருக்கிறாள். நெஞ்சில் கரம் குவித்து, முகம் மலர்ந்து ஜனங்களுக்கு எதிர் நோக்கின பார்வையுடன் இருக்கும் இந்த பரலோக அன்னை, உலக பாவ இருளைக் கண்டு, கிறிஸ்தவர்களுக்கு சாத்தானால் ஏற்படும் இன்னல்களை நினைத்தும் மனம் உருகினாள்.

1803 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 -ம் நாள் (சரியான தமிழ் ஆண்டு 979 -ம் வருடம் ஜப்பசி மாதம் 7-ம் நாள் முற்பகல் 11.20 மணியளவில் காட்சி கொடுத்தாள். அதாவது, சவரிமுத்துப்பிள்ளை என்பவர் பீடத்தின் முன்னால் முழந்தாட்படியிட்டு செபித்துக்கொண்டிருந்தார். திடீரென்று மாதாவி;ன் முகம் ஒருவித மேகத்தால் மங்கியது. பவளம் போன்ற கன்னங்களின் மேல் கண்ணீர் வடிந்தோடியது. பவளம் போன்ற கன்னங்களின் மேல் கண்ணீர் வடிந்தோடியது. நெஞ்சில் குவிந்திருந்த இரண்டு கரங்கள் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தன. இந்த அற்புதக்காட்சியைக் கண்ட சவரிமுத்துப்பிள்ளை திகிலடைந்தார். பங்குத் தந்தையிடம் ஓடோடிச் சென்று விபரத்தைக் கூறினார். அன்று இங்கு தங்கியிருந்த பெஸ்கி அடிகளார். (பெஸ்கி அடிகளார் என்ற வீராமாமுனிவரல்ல) சக்கரீஸ்து உபதேசியார் வியாகப்பபிள்ளை ஆகியோர் வந்து இந்தக் காட்சியைக் கண்டு அணைவரும் வியப்படைந்தனர். மேலும் ஊரில் தங்கியிருந்த ஜரோப்பிய மாது பில்பெக் என்ட்ரிக் அம்மாள் ஓடி வந்து காட்சியைக் கண்டாள். அவ்வம்மையார் அருகில் சென்று நுணக்கமாகச் சோதித்துப்பார்த்து வியப்படைந்தார். பரிசுத்த தேவமாதா சுரூபத்தில் காணும் மூன்று விதத் தோற்றங்களும் உறுதி – உண்மையானவை. மற்ற புனிதர்களின் முகங்களும் துக்ககரமாகக் காண்பதும் மெய். இதனை உறுதிப்படக் கூறுகின்றேன் என்றார். இவை அனைத்தும் அற்புதமான புதமை என்று பங்கு குரு ஜாண் லூயிஸ் கர்டோஸா அடிகள், பெஸ்கி அடிகள், பில்பக் என்ட்ரிக் அம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்து வெளிப்படுத்தினார்கள். எனவே கோயில் மணி அடிக்கப்பட்டது. ஊர் மக்கள் வந்து கூடினார்கள். பரலோக மாதா சுரூபம் கரம் விரித்துக் கண்ணீர் ததும்பி ஓடி பவளக் கன்னங்களின் வழியாக வருவதைக் கண்டு மக்கள் பிரமித்து, பயத்தாலும், அதிசயத்தாலும் பரவசமானார்கள். அந்த நேரத்தில் உபதேசியார் மதுரேந்திர அண்ணாவியார் பயபக்தியுடன் பீடத்தின் மேல் ஏறி மாதாவின் முகத்தின் கண்ணீரைத் துடைத்தார். கண்ணீர் நின்ற பாடு இல்லை. தாரை தாரையாகக் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

vision-2

இவையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் பயந்தனர். இதய உருக்கம் எவ்வளவென்று சொல்ல முடியாது. பீடத்தில் உபதேசியார். மெழுகுதிரிகளை ஏற்றினார். எல்லோரும் முழந்தாட்படியிட்டு “என் பாவமே, என் பெரும் பாவமே” என்ற ஜெபத்தை நெஞ்சில் பிழை தட்டிக்கொண்டு சொன்னார்கள். பொறுத்தருளும் கர்த்தாவே உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும், என்றெக்கும் எங்கள்மேல் கோபமாக இராதேயும் என்ற ஜெபத்தை மும்முறை பக்தி உருக்கத்துடன் செபித்து முடிக்கவே, மக்களின் கண் பார்வையிலேயே இரண்டு கரங்களும் மெதுவாகச் சுரங்கின சுரூபத்தின் தோற்றங்களும் மறைந்து இயற்கைச் சாயலாக முன்பு இருந்தது போல் மாறியது… அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்து, மாதாவுக்கு நன்றியறிந்த தோஸ்திரம் புரிந்து தத்தம் இல்லம் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *